< Back
மாநில செய்திகள்
குற்றாலம் அருவிகளில் நீண்ட வரிசையில் நின்று குளித்த சுற்றுலா பயணிகள்
தென்காசி
மாநில செய்திகள்

குற்றாலம் அருவிகளில் நீண்ட வரிசையில் நின்று குளித்த சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
30 May 2022 6:55 PM IST

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்து சென்றனர்.

தென்காசி:

குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெயில் அடித்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே குளிர்ந்த காற்று வீசியது. மிதமான வெயில் அடித்தது. அருவிகளில் தண்ணீர் மிகவும் குறைவாக விழுந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்ததால், சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளிக்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. எனவே இன்னும் ஒரு சில நாட்களில் குற்றாலத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு மழை பெய்யும்போது அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து சீசன் தொடங்கும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்