< Back
மாநில செய்திகள்
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மாநில செய்திகள்

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தினத்தந்தி
|
10 Nov 2023 8:44 PM IST

தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ரம்மியமான சூழலில் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழ்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்த நிலையில், தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.


மேலும் செய்திகள்