< Back
மாநில செய்திகள்
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மாநில செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தினத்தந்தி
|
2 Oct 2024 3:15 PM IST

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி,

குற்றாலத்தில் சீசன் முடிந்த நிலையில் அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதனிடையே கடந்த மாதம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த திடீர் மழையால் மெயின் அருவி, ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து குறைந்த பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஓரிரு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பாதுகாப்பு கருதி இன்று குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்