< Back
மாநில செய்திகள்
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மாநில செய்திகள்

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தினத்தந்தி
|
3 July 2022 9:27 PM IST

விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கடையநல்லூர்,

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த மழை காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றின் மிதமான தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கூடம் அதிகமாக இருந்தது. இன்று விடுமுறை தினம் என்பதால் வழக்கதை விட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

இன்று காலை முதலே குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் மாலை 6 மணி அளவில் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்ததால் அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அருவிகளில் நீர் வர்த்து குறைந்த பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்