< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை..!
|2 Aug 2023 1:08 PM IST
சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தேனி,
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இந்த அருவிக்கு ஹைவேவிஸ் தூவானம் அணையில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தினமும் தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்வதால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இந்த நிலையில் அருவிக்கு செல்லும் வழியில் யானைகள் அதன் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. இதன் காரணமாக சுருளி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் வருத்தமடைந்துள்ளனர்.