< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
|2 Sept 2023 1:28 AM IST
மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
அம்பை:
மணிமுத்தாறு அருவி பகுதியில் கடந்த 4 நாட்களாக வனத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.