< Back
மாநில செய்திகள்
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
மாநில செய்திகள்

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தினத்தந்தி
|
8 July 2022 5:48 PM IST

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது குளிர்ந்த காற்று வீசி வருகிறது. வெயிலே இல்லை. நேற்று முன்தினம் தொடர்ந்து பெய்த சாரல் மழையினால் இங்கு உள்ள மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். பின்னர் இரவில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்