< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
|15 July 2022 12:20 PM IST
குற்றாலத்தில் இன்று காலை முதல் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் தண்ணீர் சீராக விழுகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மதியம் முதல் பெய்த மழையினால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலை மெயினருவியில் பாதுகாப்பு வளைவை முற்றிலும் மூழ்கும் வண்ணம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இன்று காலை முதல் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் தண்ணீர் சீராக விழுகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் மீண்டும் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.