< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
|1 July 2022 6:18 PM IST
குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி,
குற்றாலம் ஐந்தருவில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று குற்றாலத்தில் தொடர் சாரல் மழை பெய்தது. இதனால் நேற்று மாலை ஐந்தருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது அருவியில் சிறுசிறு கற்கள் மற்றும் மரத்துண்டுகள் விழுந்தன. இதனால் போலீசார் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதித்தனர். நள்ளிரவுக்கு மேல் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலாப்பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சாரல் மழை பெய்ததால், சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச்சென்றனர்.