< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
|15 Dec 2022 5:17 PM IST
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
தென்காசி,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
நேற்று மாலை பெய்த பலத்த மழையால் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலையில் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனையடுத்து குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர்.