குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
|குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெரும்பாலான இடங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதேபோன்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனைத்து அருவிகளிலும் அனுமதி வழங்கப்படவில்லை. இன்று காலை மெயினருவியை தவிர மற்ற அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.