< Back
மாநில செய்திகள்
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா பஸ் மோதல்; வாலிபர் சாவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா பஸ் மோதல்; வாலிபர் சாவு

தினத்தந்தி
|
19 July 2022 1:00 PM IST

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா பஸ் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலத்திலிருந்து திருத்தணியை நோக்கி ஆன்மீக சுற்றுலாவுக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு சொகுசு பஸ் வந்து கொண்டிருந்தது. திருத்தணி-அரக்கோணம் சாலையில் வள்ளிமாபுரம் என்ற இடத்தில் பஸ் வந்த போது, திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் அரக்கோணம் நோக்கி சென்றுகொண்டு இருந்த 35 வயது மதிக்கதக்க ஒருவர் வேகத்தடை மீது ஏறி தடுமாறி கொண்டு இருந்தார். அப்போது பஸ் மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் பலமாக மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே அடையாளம் தெரியாத வாலிபர் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அரக்கோணம்-திருத்தணி சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்