செங்கல்பட்டு
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி சுற்றுலா வளர்ச்சிக்கழக பணியாளர் பலி
|தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி சுற்றுலா வளர்ச்சிக்கழக பணியாளர் பரிதாபமாக இறந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளை கவரும் வகையில் கடற்கரை கோவில் வளாகத்தில் நாட்டிய விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக ஓட்டல் நிர்வாகம் சார்பில் நாட்டிய விழா அரங்கில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 30) வேலை செய்து வந்தார். இவர் மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிக்கழக ஓட்டல் ஊழியர் ஆவார்.
நேற்று நாட்டிய விழா முடிந்ததும் அங்கு அமைக்கப்பட்ட உணவகத்தில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பூஞ்சேரி என்ற இடத்தில் சாலையோரை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காம்ய அடைந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.