< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
நாகா்கோவிலில் சாரல் மழை
|5 Dec 2022 1:16 AM IST
நாகா்கோவிலில் சாரல் மழை
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடிப்பதும் பின்னர் சீதோஷ்ண நிலை மாறி மழை பெய்வதுமாக உள்ளது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று வழக்கம் போல வெயில் அடித்தது. ஆனால் இரவு 10 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நள்ளிரவிலும் விட்டு விட்டு பெய்தது. பலத்த மழையாக இல்லாமல் சாரல் மழையாக பெய்ததால் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. மேலும் குளங்களுக்கும் தண்ணீர் வரத்து இருப்பதால் அவை நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.