< Back
மாநில செய்திகள்
தொப்பூர் சாலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
மாநில செய்திகள்

தொப்பூர் சாலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

தினத்தந்தி
|
25 Jan 2024 4:18 AM GMT

தொப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் உள்வட்டம், தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் நேற்று (24.1.2024) மாலை 5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்த்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கோயம்புத்தூர், டவுன்ஹால், அசோக் நகரைக் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு, விமல், அனுஷ்கா, ஜெனிபர் ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர் என்றும், 8 நபர்கள் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்