< Back
மாநில செய்திகள்
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: பாதிக்கப்பட்ட நபருக்கு சி.பி.சி.ஐ.டி. மீண்டும் சம்மன்
மாநில செய்திகள்

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: பாதிக்கப்பட்ட நபருக்கு சி.பி.சி.ஐ.டி. மீண்டும் சம்மன்

தினத்தந்தி
|
1 Aug 2023 9:22 PM IST

பாதிக்கப்பட்ட சூர்யா என்ற நபருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சூர்யா என்ற நபருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி சூர்யா நாளை காலை 11 மணிக்கு நெல்லை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.



மேலும் செய்திகள்