பெரம்பலூர்
வாக்குப்பதிவை சரிபார்க்கும் கருவிகள் கொண்டு வரப்பட்டது
|விழுப்புரத்தில் இருந்து பெரம்பலூருக்குவாக்குப்பதிவை சரிபார்க்கும் கருவிகள் கொண்டு வரப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவை சரிபார்க்கும் கருவிகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கு தேர்தல் பிரிவின் கட்டுப்பாட்டில் காப்பறை உள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 110 கட்டுப்பாட்டு கருவிகளும், வாக்குப்பதிவை சரிபார்க்கும் 180 கருவிகளும் கண்டெய்னர் லாரி மூலம் பாதுகாப்பாக நேற்று மதியம் கொண்டு வரப்பட்டது. இந்த கருவிகளை காப்பறையில் வைப்பதற்காக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கற்பகம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் காப்பறை திறக்கப்பட்டு, கருவிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் காப்பறை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதில் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் பிரிவு தாசில்தார் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.