< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
உணவில் அதிக செயற்கை நிறம்... உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
|9 Nov 2023 8:44 PM IST
தென்காசியில் பலகாரங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் இடங்களில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் மேலகரம் மற்றும் குத்துக்கல் வலசை பகுதிகளில் பலகாரங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் இடங்களில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இதில் அதிகமாக செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட 31 கிலோ இனிப்பு பலகாரங்கள், 22 கிலோ தின்பண்டங்கள், 40 லிட்டர் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் ஆகியவை கண்டறியப்பட்டு, அழிக்கப்பட்டது. இதுதொடர்பாக 3 கடைகளுக்கு, சுமார் 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டது.