< Back
மாநில செய்திகள்
தக்காளி தந்த பாதுகாப்பு
திருப்பூர்
மாநில செய்திகள்

தக்காளி தந்த பாதுகாப்பு

தினத்தந்தி
|
21 July 2023 11:19 PM IST

தக்காளி தந்த பாதுகாப்பு என்ற சுவையான சிறுகதை சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது.

தக்காளி தந்த பாதுகாப்பு என்ற சுவையான சிறுகதை சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது.

கட்டுப்படியாகும் விலை

தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகளின் தாறுமாறான விலை ஏற்றம் பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. அதேநேரத்தில் படிப்படியான விலை ஏற்றம் என்பது தான் வளர்ச்சி, திடீர் விலை ஏற்றம் என்பது நல்லதல்ல என்பதை விவசாயிகளும் உணர்ந்துள்ளனர். படிப்படியாக விலை உயர்ந்து எப்போதும் கட்டுப்படியாகும் விலைக்கு காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் விற்பனையாக வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதேநேரத்தில் தக்காளி விலை உயர்வு பல கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அறிமுகப்படுத்தியுள்ளது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தக்காளி குறித்து ஏராளமான நகைச்சுவை துணுக்குகள், கவிதைகள், சிறுகதைகள் சமூக வலைத்தளங்களில் வலம் வருவதுடன், அனைவரையும் கவர்ந்தும் வருகிறது. அந்தவகையில் சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக வலம் வரும் 'தக்காளி தந்த பாதுகாப்பு' என்ற குட்டிக்கதை ஓன்று அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதோ அந்த கதை

நள்ளிரவு 12 மணி...வெளியூருக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கிறான் ஒருவன். கும்மிருட்டில் வீடுகள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. தெரு விளக்குகள் எரியாதது மட்டுமல்லாமல் எந்த வீட்டிலும் விளக்குகள் எரியவில்லை. சாலையே தெரியாத அளவுக்கு கும்மிருட்டு.. எங்கிருந்தோ வரும் நாயின் ஊளையிடும் குரல் அடிவயிற்றில் பயத்தை கிளப்புகிறது.

இந்த இருட்டில் எப்படி வீட்டுக்கு செல்வது என்று தவித்தவனுக்கு திடீர் யோசனை. "தக்காளி கிலோ 5 ரூபாய்...வாங்க..வாங்க...' என்ன ஆச்சர்யம்...தெருவிலுள்ள அனைத்து வீடுகளிலும் ஒட்டுமொத்தமாக விளக்குகள் பளிச்சிடத் தொடங்கியது. பளீர் விளக்கொளியில் பாதுகாப்பாக வீடு போய் சேர்ந்தான்.' என்று முடிகிறது அந்த குட்டி கதை. அனைவரையும் சில நிமிடங்கள் படித்து ரசிக்க வைக்கிறது இந்த கதை.

Related Tags :
மேலும் செய்திகள்