< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
சந்திரகிரகணத்தையொட்டி சிறுவாபுரி முருகன் கோவிலில் நாளை நண்பகல் தரிசனம் ரத்து
|7 Nov 2022 12:24 PM IST
சந்திரகிரகணத்தையொட்டி சிறுவாபுரி முருகன் கோவிலில் நாளை நண்பகல் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
சந்திர கிரகணம் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.32 மணிக்கு நிறைவடைகிறது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி முருகன் கோவிலில் நாளை சந்திர கிரகணத்தையொட்டி நண்பகல் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி நாளை நண்பகல் 12 மணிக்கு கோவில் மூடப்படுகிறது. சந்திர கிரகணம் முடிந்த பின்னர் சாந்தி செய்யப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் பக்தர்களின் தரிசனத்துக்கு கோவில் திறக்கப்படும் என்று கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 25-ந் தேதி சூரிய கிரகணம் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை அன்றும் இதே போன்று நண்பகல் தரிசனம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.