< Back
மாநில செய்திகள்
நாளை முன்னாள் படை வீரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

நாளை முன்னாள் படை வீரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தினத்தந்தி
|
29 March 2023 12:35 AM IST

முன்னாள் படை வீரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர்களின் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) பகல் 12.30 மணியளவில் நடைபெறுகிறது. முன்னதாக காலை 11.30 மணியளவில் முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு நடைபெறும். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், விதவையர்கள் மற்றும் படைவீரர்களை சேர்ந்தோர் அவர்களின் குறைகள் குறித்த மனுக்களை அன்றைய தினம் கலெக்டரிடம் நேரடியாக வழங்கலாம். மனு அளித்திட விரும்பும் முன்னாள் படைவீரர், விதவையர் அவர்களது கோரிக்கை குறித்த மனுக்களை, இரட்டைப்பிரதிகளில், அடையாள அட்டை நகலுடன் வழங்க வேண்டும். மேலும் மனு அளிக்க விரும்பும், முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்களது மனுக்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்