< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!
|2 Feb 2023 7:50 PM IST
திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்,
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழையும், குமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலைய ஆய்வு மையம் தெரிவித்தது.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகின்றது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு 3-ம் தேதி (நாளை) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.