< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
|8 March 2024 10:01 PM IST
மக்களின் கோரிக்கையை ஏற்று நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
சிவபெருமானை வழிபாடு செய்ய மகா சிவராத்திரி என்னும் ஒரு நாள் முக்கியமானதாக இருக்கிறது. இந்த ஆண்டு இன்று மாலை 6 மணி தொடங்கி நாளை காலை 6 மணி வரை மகா சிவராத்திரி தினம். சிவராத்திரி தினத்தன்று இரவு கண் விழிப்பது மிக அவசியம். விளக்கேற்றுவதும், அபிஷேகப் பொருட்கள் கொடுப்பதும் மிகுந்த புண்ணியத்தை தரும். சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இந்த நிலையில், மகா சிவராத்திரியையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.