< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!
|7 Dec 2022 10:01 PM IST
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு 700 கி.மீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. வேகம் குறைந்து கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது எனவும் மேற்கு வட மேற்கில் நகர்ந்து இது புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரணமாக தஞ்சை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கனமழை முன்னேச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.