< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
|16 July 2023 12:09 AM IST
ஆடி அமாவாசையைெயாட்டி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை (திங்கட்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரம், சேதுக்கரை, தேவிபட்டினம் போன்ற பகுதிகளுக்கு கடலில் நீராட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் வருவார்கள். இதனால் பஸ்களில் கடும் நெரிசல் ஏற்படும். சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி நாளை மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.