< Back
மாநில செய்திகள்
சென்னையில் நாளை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை...!
மாநில செய்திகள்

சென்னையில் நாளை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை...!

தினத்தந்தி
|
1 Dec 2023 10:51 AM GMT

நாளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் நாளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,

அரசு பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்களுக்கு நாளைய தினம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி வகுப்புகள் இருப்பதன் காரணமாக நாளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்