< Back
மாநில செய்திகள்
நியாய விலைக் கடைகளுக்கு நாளை விடுமுறை
மாநில செய்திகள்

நியாய விலைக் கடைகளுக்கு நாளை விடுமுறை

தினத்தந்தி
|
24 Nov 2023 7:19 AM IST

தீபாவளி பண்டிகையையொட்டி நியாய விலைக் கடைகள் விடுமுறையின்றி இயங்கின.

சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை தொடா்ச்சியாக விடுமுறையின்றி நியாய விலைக் கடைகள் அனைத்தும் இயங்கின. தொடர்ச்சியாக நியாய விலைக் கடைகள் விடுமுறையின்றி இயங்கியதற்கு ஈடாக வரும் நாட்களில் விடுமுறை வழங்கபடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இதற்கு முன்னர் கடந்த 13-ஆம் தேதி அன்று நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இதேபோன்று, நவ.25-ம் தேதி விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி, தமிழகத்திலுள்ள நியாய விலைக் கடைகள் நாளை இயங்காது.

மேலும் செய்திகள்