< Back
மாநில செய்திகள்
நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
மாநில செய்திகள்

நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்

தினத்தந்தி
|
7 Jun 2024 1:18 PM IST

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை,

திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (சனிக்கிழமை) திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். கூட்டத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்