< Back
மாநில செய்திகள்
பாம்பன் வாரச்சந்தையில் தக்காளி ரூ.90-க்கு விற்பனை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பாம்பன் வாரச்சந்தையில் தக்காளி ரூ.90-க்கு விற்பனை

தினத்தந்தி
|
7 Aug 2023 12:15 AM IST

பாம்பன் வாரச்சந்தையில் தக்காளி ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ராமேசுவரம்,

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே தக்காளியின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் தக்காளியின் விலை ரூ.150-ல் இருந்து ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலும் தக்காளி 1 கிலோ 150 முதல் 170 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஞாயிற்றுக்கிழமையான நேற்று வார சந்தைகள் தினமாக இருந்ததால் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. வாரச்சந்தையில் உடுமலைப்பேட்டையில் இருந்து வியாபாரி ஒருவரால் அமைக்கப்பட்டிருந்த காய்கறி கடை ஒன்றில் 1 கிலோ தக்காளி ரூ.90க்கு விற்பனை செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களிலும் 170 க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் பாம்பன் வாரச்சந்தை கடை ஒன்றில் 90க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளியை வாங்க ஆண்களும், பெண்களும் போட்டி போட்டபடி மிகுந்த ஆர்வமுடன் தக்காளியை வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்