< Back
மாநில செய்திகள்
தக்காளி கிலோ ரூ.108-க்கு விற்பனை
திருவாரூர்
மாநில செய்திகள்

தக்காளி கிலோ ரூ.108-க்கு விற்பனை

தினத்தந்தி
|
2 July 2023 12:15 AM IST

மன்னார்குடியில் தக்காளி விலை ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டதால் இ்ல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தக்காளி கிேலா ரூ.108-க்கு விற்பனை

அனைவரது வீட்டிலும் சமையலில் முக்கிய இடம் வகிக்கும் பொருளாக தக்காளி உள்ளது. அன்றாடம் தக்காளி இன்றி சமையல் இல்லை என்ற நிலை தான் அனைவரது வீட்டிலும் உள்ளது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வந்தது. கடந்த ஒரு வாரமாக மன்னார்குடி உழவர் சந்தையில் கிலோ ரூ. 84, 80 என்ற அளவில் இருந்த தக்காளியின் விலை நேற்று மன்னார்குடி உழவர் சந்தையில் கிலோ ரூ. 108 என்று உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.

இல்லத்தரசிகள் அதிர்ச்சி

காலையில் சட்னி, மதியம் குழம்பு, இரவு டிபன் என அனைத்திற்கும் பயன்படும் தக்காளி பெரியவர், குழந்தைகள் என அனைவரும் விரும்பும் சமையல் பொருளாக உள்ளது.

தக்காளி இன்றி சமையல் இல்லை என்ற அளவில் இருக்கும் தக்காளியின் விலை சதமடித்து உயர்ந்தது மன்னார்குடி பகுதி இல்லத்தரசிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அரசு உடனடியாக தலையிட்டு தக்காளியின் விலை உயர்வை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்