< Back
மாநில செய்திகள்
சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட தக்காளி
கரூர்
மாநில செய்திகள்

சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட தக்காளி

தினத்தந்தி
|
29 Sept 2023 12:25 AM IST

சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட தக்காளியை பார்த்து வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி ஒரு கிலோ ரூ.150 முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தக்காளி விலை கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கப்படுகின்றது. இதனால், தக்காளி சாகுபடி செய்த செலவு கூட கிடைக்காததால் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூர்-திருச்சி சாலை மூலக்காட்டானூர் அருகே சாலை ஓரத்தில் விவசாயி ஒருவர் சுமார் 30 கிலோ தக்காளியை கொட்டி விட்டு சென்றுள்ளார். தற்போது தக்காளி சாகுபடி அதிகரித்துள்ளதால் விலையும் குறைந்துள்ளது. விலை குறைவால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்