< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் நடமாடும் வாகனங்கள் மூலம் தக்காளி விற்பனை - தோட்டக்கலைத்துறை அறிவிப்பு
|11 July 2023 8:06 PM IST
நடமாடும் வாகனங்கள் மூலம் ஒரு கிலோ தக்களி ரூ.65 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் நாளை முதல் 2 நடமாடும் வாகனங்கள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக செம்மொழிப்பூங்காவில் நாளை நடமாடும் வாகனம் மூலம் 100 கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.
அதே போல் மாதவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு நடமாடும் வாகனம் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கிலோ தக்களி ரூ.65 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படும் என்றும், மற்ற காய்கறிகளையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.