< Back
மாநில செய்திகள்
தக்காளி விலை கிடுகிடு உயர்வு
தேனி
மாநில செய்திகள்

தக்காளி விலை கிடுகிடு உயர்வு

தினத்தந்தி
|
26 Jun 2023 12:30 AM IST

ஆண்டிப்பட்டி மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது

வரத்து குறைவு

தேனி மாவட்டத்தில் தேனி, ஆண்டிப்பட்டி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த காய்கறி மார்க்கெட் மூலம் தேனி மாவட்டத்தில் விளையும் காய்கறிகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், கேரள மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் விளையும் தக்காளியை, வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாகவே சென்று வாங்கி வருகின்றனர். இந்நிலையில் காய்கறி மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இதன் காரணமாக தக்காளி விலை அதிகரித்து கொண்டே வந்தது.

தக்காளி விலை உயர்வு

தற்போது விலை கிடுகிடுவென உயர்ந்து, 14 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டி ரூ.1,000 முதல் ரூ.1,100 வரையில் விற்பனையானது. அதே நேரத்தில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்து உள்ளதால் தற்போது விலை உயர்வு மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரத்து குறைவாக உள்ளதால் மாவட்டத்தில் தக்காளிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்