< Back
மாநில செய்திகள்
தக்காளி விலை வீழ்ச்சி
விருதுநகர்
மாநில செய்திகள்

தக்காளி விலை வீழ்ச்சி

தினத்தந்தி
|
11 Dec 2022 12:37 AM IST

தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தாயில்பட்டி,

தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தக்காளி சாகுபடி

தாயில்பட்டி, சுப்பிரமணியபுரம், பூசாரி நாயக்கன்பட்டி, வெற்றிலையூரணி, எட்டக்காபட்டி, மடத்துப்பட்டி, ஜெகவீரம்பட்டி, வால்சாபுரம், சிப்பிபாறை, செவல்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, கங்கர்செவல், சக்கமாள்புரம், ராமு தேவன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து சாரல் மழை காரணமாக தக்காளி வீணாவதை தடுப்பதற்காக விவசாயிகள் தக்காளி அறுவடை பணியை தற்போது தீவிரபடுத்தியுள்ளனர். தக்காளி வரத்து அதிகரித்த காரணமாக விலை குறைந்துள்ளதால் விளைச்சல் இருந்தும் விலை கிடைக்காத நிலை தற்போது உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

விலை வீழ்ச்சி

இதுகுறித்து கங்கர் செவல் விவசாயி பரந்தாமன் கூறியதாவது:-

வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்வதால் வேர் அழுகல் நோயினால் தக்காளி வீணாக வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்ப்பதற்காக தக்காளியை அறுவடை செய்யும் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.

மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்ததால் வியாபாரிகள் விலையை குறைத்துள்ளனர். தற்போது ஆப்பிள் வகை தக்காளி கிலோ ரூ. 10 முதல் ரூ.15 வரை விற்பனை ஆகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தக்காளி கிலோ ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் இன்னும் விலை கூடுதலாக கிடைக்கும் என நினைத்திருந்த விவசாயிகளுக்கு தற்போது ஏமாற்றம் தான் மிச்சமாக உள்ளது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்