< Back
மாநில செய்திகள்
கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைவு...!
மாநில செய்திகள்

கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைவு...!

தினத்தந்தி
|
5 Aug 2023 8:06 AM IST

சென்னை, கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்துள்ளது.

சென்னை,

கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை அதிகரித்து வந்தது. தங்கம் விலை போல தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

கடந்த சில தினங்களாக சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை உயருவதும், குறைவதுமாக இருந்து வந்தது. கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.180 வரை உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து கடந்த சில தினங்களாக விலை உயர்ந்து வந்த தக்காளி, வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை குறைய தொடங்கியது.

கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று கிலோ ரூ.120க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.20 விலை குறைந்து ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

மேலும் செய்திகள்