< Back
மாநில செய்திகள்
சென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.5 குறைந்தது..!!
மாநில செய்திகள்

சென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.5 குறைந்தது..!!

தினத்தந்தி
|
3 July 2023 8:21 AM IST

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 5 குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை,

கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் காய்கறி விலை அதலபாதாளத்தில் சரிந்தது. மூட்டை மூட்டைகளாக காய்கறியை கீழே கொட்டும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. இந்தநிலையில் அதற்கு நேர் எதிராக சில நாட்களாகவே காய்கறி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து நிற்கிறது. இந்தநிலையில் காய்கறி விலை நேற்றும் உயர்ந்து காணப்பட்டது.

தக்காளி விலை கிடுகிடு உயர்வு காரணமாக ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது குறித்து கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் சென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.5 குறைந்துள்ளது. நேற்று கிலோ ரூ.100க்கு விற்கப்பட்ட தக்காளி, இன்று ரூ.95க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனையில் கிலோவுக்கு ரூ.120 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே போல் சின்ன வெங்காயம் விலை ரூ.80-க்கும், பீன்ஸ் விலை கிலோவுக்கு ரூ.100-க்கும், இஞ்சி விலை கிலோவுக்கு ரூ.200-க்கும், பூண்டு விலை ரூ.130-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்