< Back
தமிழக செய்திகள்
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சிதர்மபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.8-க்கு விற்பனை
தர்மபுரி
தமிழக செய்திகள்

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சிதர்மபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.8-க்கு விற்பனை

தினத்தந்தி
|
1 Oct 2023 12:30 AM IST

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தக்காளி சாகுபடி குறைந்ததால் அதன் விலை கிலோ ரூ.100-ஐ கடந்தது. பின்னர் சந்தைக்கு தக்காளி வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதன் காரணமாக விலை குறைய தொடங்கியது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தக்காளி சாகுபடி அதிகரித்ததால் சந்தைக்கு அதிகளவில் வந்தது. இதனால் தக்காளி விலை மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.14-க்கு விற்பனையானது. நேற்று தக்காளி விலை கிலோவிற்கு ரூ.6 குறைந்து ரூ.8-க்கு விற்பனையானது. வெளி மார்க்கெட்டுகளில் ரூ.15 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்