< Back
மாநில செய்திகள்
வரத்து அதிகரிப்பால்தக்காளி விலை மேலும் குறைந்ததுதர்மபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.50-க்கு விற்பனை
தர்மபுரி
மாநில செய்திகள்

வரத்து அதிகரிப்பால்தக்காளி விலை மேலும் குறைந்ததுதர்மபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.50-க்கு விற்பனை

தினத்தந்தி
|
5 Aug 2023 12:30 AM IST

தக்காளி வரத்து அதிகரித்ததால் அதன் விலை மேலும் குறைந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தக்காளி வரத்து அதிகரிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த மாதம் தக்காளி விலை ரூ.100-ஐ தொட்டது. தக்காளி விலை கடுமையாக உயர்ந்ததால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் வீடுகளில் உணவு சமைப்பதற்கு தக்காளியை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். உணவில் தக்காளிக்கு பதிலாக புளியை பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் தக்காளி வரத்தை அதிகரிக்கவும் விலையை கட்டுப்படுத்தவும் அரசின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கிடையே கடந்த சில நாட்களாக தக்காளி அறுவடை அதிகரித்ததால் சந்தைக்கு தக்காளி வரத்து மீண்டும் அதிகரித்தது.

ரூ.50-க்கு விற்பனை

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தர்மபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.90-க்கு விற்பனையான தக்காளி நேற்று முன்தினம் கிலோ ரூ.68-ஆக குறைந்தது. இந்த நிலையில் நேற்று வரத்து மேலும் அதிகரித்ததால் தக்காளி விலை ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.18 குறைந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ.50- க்கு விற்பனையானது.

வெளிமார்க்கெட்டுகளில் ரூ.60 முதல் ரூ.70 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலை நேற்று கணிசமாக குறைந்ததால் அதன் விற்பனை அதிகரித்தது. தர்மபுரி உழவர் சந்தையில் தக்காளி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

மேலும் செய்திகள்