தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு
|29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் 10 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை உயர்கிறது.
சென்னை,
தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்க கட்டணம் 10 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை உயர்கிறது. சென்னையை பொறுத்தவரை புறநகர் பகுதியில் உள்ள பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியை பொறுத்தவரை கார்களுக்கு 60 ரூபாயில் இருந்து 70 ரூபாயாகவும், இலகுரக வாகனங்களுக்கு 105 ரூபாயில் இருந்து 115 ரூபாயாகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு 205 ரூபாயில் இருந்து 240 ரூபாயாகவும் கட்டணம் உயர்கிறது.
அதே போல் மூன்று சக்கர வாகனங்களுக்கு 225 ரூபாயில் இருந்து 260 ரூபாயாகவும், நான்கு முதல் ஆறு சக்கர வாகனங்களுக்கு 325 ரூபாயில் இருந்து 375 ரூபாயாகவும், ஏழு சக்கரம் அல்லது அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு 395 ரூபாயில் இருந்து 455 ரூபாயாகவும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.