கரூர்
கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு
|கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சுங்கக்கட்டணம்
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணவாசி சுங்கச்சாவடியில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 1-ந்தேதி சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி புதிய சுங்க கட்டண உயர்வு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. மணவாசி சுங்கச்சாவடியில் கார், வேன், ஜீப் வாகனங்களுக்கு ஒருமுறை பயண கட்டணம் ரூ.45-ல் இருந்து ரூ.55 ஆகவும், சென்று திரும்பும் கட்டணம் ரூ.90-ல் இருந்து ரூ.110 ஆகவும், பாஸ்ட்டேக் கட்டணம் ரூ.70-ல் இருந்து ரூ.80 ஆகவும், மாதாந்திர பாஸ் ரூ.1,420-ல் இருந்து ரூ.1,605 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.இலகு ரக வர்த்தக வாகனத்துக்கு ஒருமுறை கட்டணம் ரூ.85-ல் இருந்து 95 ஆகவும், சென்று திரும்பும் கட்டணம் ரூ.170-ல் இருந்து ரூ.190 ஆகவும், பாஸ்ட் டேக் கட்டணம் ரூ.125-ல் இருந்து ரூ.140 ஆகவும், மாதாந்திர பாஸ் ரூ.2,490-ல் இருந்து ரூ.2,810 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
1-ந்தேதி முதல் அமல்
பஸ் மற்றும் டிரக் ஒருமுறை கட்டணம் ரூ.165-ல் இருந்து ரூ.185 ஆகவும், சென்று திரும்பும் கட்டணம் ரூ.330-amp;ல் இருந்து ரூ.370 ஆகவும், பாஸ்ட் டேக் கட்டணம் ரூ.250-ல் இருந்து ரூ.280 ஆகவும் மாதாந்திர பாஸ் ரூ.4,975-ல் இருந்து ரூ.5,620 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.இதேபோல கரூர் மாவட்டம், வேலஞ்செட்டியூரில் உள்ள சுங்கச்சாவடியிலும் செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் புதிதாக உயர்த்தப்பட்ட கட்டணம் நடைமுறைக்கு வருகிறது.