தஞ்சாவூர்
பயன்படுத்த இயலாத நிலையில் கழிவறை
|பூதலூர் ரெயில் நிலையத்தில் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள கழிவறையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருக்காட்டுப்பள்ளி;
பூதலூர் ரெயில் நிலையத்தில் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள கழிவறையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
பூதலூர் ரெயில் நிலையம்
தஞ்சை மாவட்டம் பூதலூர் ரெயில் நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தில் செயல் படாத கழிவறை உள்ளது. இந்த கழிவறை அருகில் பட்டுப் போன மரம் ஒன்று உள்ளது. காரைக்கால், சென்னை, மயிலாடுதுறை விரைவு ரெயில்கள் பூதலூர் ரெயில் நிலையத்தின் 2-வது பிளாட்பாரத்தில் நின்று செல்லும்.இதில் இருந்து இறங்கி செல்லும் பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முறையாக கழிவறை இல்லாததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பட்டுப்போன மரம்
ரெயிலில் அதிகாலை நேரத்தில் மைசூர் -மயிலாடுதுறை விரைவு ரெயில், எர்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரெயில்களில் இருந்து இறங்கும் பயணிகள் இயற்கை உபாதை கழிக்க இடமில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் 2-வது பிளாட்பாரத்தில் பயன் படுத்த இயலாத நிலையில் உள்ள கழிவறை ஓரத்தில் பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது. தற்போது அவ்வப்போது காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் இந்த மரம் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே கழிவறையை சீரமைத்து பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.