< Back
மாநில செய்திகள்
இன்றைய புகைப்படத் தொகுப்பு (03-07-2022)

மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவினர் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.

மாநில செய்திகள்

இன்றைய புகைப்படத் தொகுப்பு (03-07-2022)

தினத்தந்தி
|
3 July 2022 8:54 AM IST

மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவினர் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.


மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி 44-வது செஸ் போட்டி நடக்க இருக்கிறது . இதையொட்டி தலைமை செயலகம் எதிரே குதிரை முகத்துடன் கை கூப்பி வரவேற்பது போன்ற சின்னம் வைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள சோழந்தூர் பகுதியில் உள்ள வயல்வெளிகளில் இரை தேட ஒன்று சேர்ந்து பறந்த கருப்பு அரிவாள் மூக்கன் பறவைகள்.

கீழடியில் நடைபெற்று வரும் எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் இரண்டடி நீளமுள்ள செங்கல் கட்டுமான சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பூதலூரில் குறுவை சாகுபடிக்கு வயலை உழுது தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாமக்கல்லில் உள்ள அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள முதியவரிடம் கலந்துரையாடினார்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் சுண்ணாம்பு மற்றும் செங்கலால் கட்டப்பட்ட அதிசய சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.

குளுகுளு சீசன் முடிவடையும் நிலையில் கொடைக்கானல் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் மன்னவனூர் ஏரியில் பரிசல் சவாரி செய்தனர்.

நாட்டிலும் வீட்டிலும் நிம்மதி, சந்தோசம் , உற்சாகம் நிறைந்திட குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

நாமக்கல்லில் அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 3.5 சதவீத அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டின் கீழ் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயிலும் மாணவன் கவினுடன் கலந்துரையாடினார்.

கன்னியாகுமரி மேல்மிடாலம் மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக அலை தடுப்புச் சுவரையும் தாண்டி தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

நாகை மாவட்ட விளையாட்டரங்கில் 2021-22-ம் ஆண்டிற்கான திருச்சிராப்பள்ளி மண்டல அளவிலான ஹாக்கி லீக் போட்டிகள் நேற்று தொடங்கின.

குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் அதிகமாக வருவதால் சுற்றுலா பயணிகள் நேற்று உற்சாகமாக குளித்தனர்.

மதுரை வாடிப்பட்டி- கச்சைக்கட்டி செல்லும் சாலையில் மரங்கள் அடர்ந்து வளர்ந்து சாலை முழுவதும் பசுமை சாலையாக காட்சி அளிக்கிறது.

அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் 516 வது ஆனிபெருந்தேர் திருவிழாவினை முன்னிட்டு நேற்று மாலை கொடிபட்டம் வீதி உலா நடைபெற்றது.

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு செருப்பு அணிய பயிற்சி அளிக்கப்பட்டது.

மதுரை பெத்தானியாபுரம் பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலய திருவிழாவையொட்டி தேர் பவனி நடைபெற்றது.

பாலாற்றில் மங்கள நாராயணிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையொட்டி, மதுரை மாவட்டம் முழுவதும் பரவலாக விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தின் மையப் பகுதியில் புதிய தூக்கு பாலம் அமைய உள்ளது. அருகில் ஆப்ரேட்டர் அறை கட்டிடம் கட்டும் பணி நடைபெறுகிறது.

பூத்துக்குலுங்கும் குல்மொஹர் பூக்கள்.. திண்டுக்கல் அருகே வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் மரமெங்கும் இலைகள் தெரியாத அளவிற்கு சிவப்பு நிறத்தில் குல்மொஹர் பூக்கள் பூத்துக்குலுங்குகிறது.

தூத்துக்குடியில் டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



மேலும் செய்திகள்