< Back
மாநில செய்திகள்
இன்று ஆடி மாத  முதல் வெள்ளிக்கிழமை:மதுரையில் பூக்கள் விலை உயர்வு- மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனை
மதுரை
மாநில செய்திகள்

இன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை:மதுரையில் பூக்கள் விலை உயர்வு- மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனை

தினத்தந்தி
|
21 July 2023 2:54 AM IST

இன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையைகொட்டி மதுரையில் பூக்கள் விலை உயர்ந்து மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனையானது


மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் மல்லிகை பூக்கள் விற்பனைக்காக டன் கணக்கில் கொண்டுவரப்படுகின்றன.. வரத்து அதிகமாக இருப்பதன் காரணமாக, கடந்த சில தினங்களாக மல்லிகை உள்ளிட்ட மற்ற பூக்களின் விலை குறைவாக இருந்து வந்தது.. ஆனால், ஆடி மாதம் தொடங்கியதை தொடர்ந்து பூக்களின் விலை படிப்படியாக உயர தொடங்கியது.

இன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை என்பதால், மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை நேற்று சற்று உயர்ந்தது. அதாவது, ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.600-க்கு விற்பனையானது. சம்பங்கி கிலோ ரூ.200, பிச்சி ரூ.500, முல்லை ரூ.400, பட்டன்ரோஸ் ரூ.150, செவ்வந்தி ரூ.250, அரளி ரூ.200 என விற்பனையானது. மற்ற பூக்களின் விலையும் சற்று உயர்ந்து இருந்தது. வரும் நாட்களிலும் பூக்களின் விலை படிப்படியாக உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்