< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
|6 April 2023 12:27 AM IST
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
புதுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட புதுக்கோட்டை, இலுப்பூர், கந்தர்வகோட்டை பகுதிக்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை புதுக்கோட்டை மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் புதுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்பான புகார்களை தெரிவித்து பயன்பெறலாம் என மின்வாரிய அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.