< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
திருமானூர் உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு இன்று ஜமாபந்தி
|17 Jun 2022 12:17 AM IST
திருமானூர் உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி இன்று (வெள்ளிக்கிழமை)நடக்கிறது.
அரியலூர் தாலுகா திருமானூர் உள் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி இன்று (வெள்ளிக்கிழமை) அரியலூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் இந்த ஜமாபந்தியில் திருமானூர் உள் வட்டத்திற்குட்பட்ட கோவில் எசனை (மேற்கு, கிழக்கு), எலந்தக்கூடம், குலமாணிக்கம் (மேற்கு, கிழக்கு), கண்டிராதீர்த்தம், திருமழப்பாடி, அன்னிமங்கலம், மஞ்சமேடு, திருமானூர், வடுகபாளையம் ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுவினை அளித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.