< Back
மாநில செய்திகள்
சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை
மாநில செய்திகள்

சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை

தினத்தந்தி
|
3 Aug 2024 8:47 AM IST

வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்,

தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர், அரசு அலுவலர்கள், பல்வேறு துறை பணியாளர்கள் குடும்பத்துடன் கொல்லிமலைப் பகுதிக்கு வருவர் என்பதால், ஆக. 3-ஆம் தேதி (இன்று) நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில், ஆக. 12-ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

அதேபோல, சேலம் மாவட்டத்திற்கும் இன்று உள்ளூர் விடுமுறையாகும். தீரன் சின்னமலை நினைவு தினம் மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்