< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தாணுமாலய சுவாமி திருக்கோவில் தேரோட்டம்: குமரி மவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
|5 Jan 2023 9:44 AM IST
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரி,
தமிழகத்தின் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவில் மார்கழி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 05.01.2023 இன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
05.01.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2022 பிப்ரவரி திங்கள் நான்காவது சனிக்கிழமை (25.02.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.