< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இன்று விடுமுறை
|7 Dec 2023 10:17 AM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
வண்டலூர்,
மிக்ஜம் புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் 4 இடங்களில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளநீர் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குள் புகுந்தது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்கா முழுவதும் வெள்ளக்காடானது. மேலும் பூங்காவில் 30 மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் பூங்காவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று புதன்கிழமை பொதுமக்கள் பார்வைக்கு தடை செய்யப்பட்டு பூங்கா மூடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பூங்காவில் பராமரிப்பு பணிகள் முடியாத காரணத்தினால் இன்று (வியாழக்கிழமை) பொதுமக்கள் பார்வைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு அனுமதிக்கப்படுவார்கள் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.