< Back
மாநில செய்திகள்
செய்யாறு, வந்தவாசியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மாநில செய்திகள்

செய்யாறு, வந்தவாசியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தினத்தந்தி
|
4 Dec 2023 8:21 AM IST

திருவண்ணாமலையில் காலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மிக்ஜம் புயல் காரணமாக வடமாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று திருவண்ணாமலையில் காலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் இருச்சக்கர வாகனங்களில் சென்றவர்கள் கையில் குடை பிடித்தபடியும், ரெயின் கோட் அணிந்தபடியும் சென்றனர்.

இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாறு, வந்தவாசி தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்