< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
|14 Sept 2024 4:15 AM IST
வேலை நாட்களை குறைக்க ஆசிரியர் சங்கங்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
சென்னை,
பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி நாட்காட்டியை வெளியிடும். அதில் எந்தெந்த நாட்களில் தேர்வுகள்?, எவ்வளவு வேலை நாட்கள்? என்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் 220 வேலைநாட்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், வேலை நாட்களை குறைக்க ஆசிரியர் சங்கங்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. அந்த கோரிக்கையை ஏற்று, 220 நாட்களில் இருந்து 210 வேலை நாட்களாக குறைக்கப்பட்டன.
இந்த நிலையில் வேலை நாட்கள் குறைக்கப்பட்டு திருத்தப்பட்ட ஆண்டு நாட்காட்டியின் அடிப்படையில், இன்று (சனிக்கிழமை) விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.